மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1174 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1174 days ago
லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படம் பருந்தாகுது ஊர்குருவி. இதில் மும்பை மாடல் அழகி காயத்ரி அய்யர், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிக்கிறார்கள். அஷ்வின் நோபல் ஒளிப்பதிவு செய்கிறார், ரெஞ்சித் உன்னி இசை அமைக்கிறார். இயக்குனர் ராமின் உதவியாளர் கோ.தனபாலன் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார். அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில், சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதே இப்படம்.
புத்தம் புதிய இளம் திறமையாளர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி வருகிறோம். கூடலூர் மண்வயல் கிராமம் அருகே மனிதர்கள் நடமாடாத இருள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். என்கிறார்.
1174 days ago
1174 days ago