மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1174 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1174 days ago
பொதுவாக நடிகர்களுக்குத்தான் பட்டங்கள் கொடுப்பார்கள். இதனை யாரும் திட்டமிட்டு, விழா எடுத்து கொடுப்பதில்லை. எங்கேயோ தொடங்கி எப்படியோ அது பரவிவிடும். ஜீ படத்தில் அஜித்தை எல்லோரும் தல என்று அழைத்ததால் அவர் தல ஆனார். சிவாஜி பட்டம் ஈ.வெ.ராமசாமி கொடுத்தது, கலைஞானி, இசைஞானி பட்டங்கள் கருணாநிதி கொடுத்தது. இளைய தளபதி பட்டம் எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்தது. மக்கள் செல்வன் பட்டம் சீனு ராமசாமி கொடுத்தது. இப்படி பட்டங்கள் பல வகை.
முன்பு நடிகைகளில் சாவித்திரிக்கு நடிகையர் திலகம், கே.ஆர்.விஜயாவுக்கு புன்னகை அரசி (பின்னர் சினேகா புன்னகை இளவரசி ஆனார்), சரோஜாதேவிக்கு கன்னடத்து பைங்கிளி, பத்மினிக்கு நாட்டிய பேரொளி பட்டம் இருந்தது. இடைக்காலத்தில் நடிகைளுக்கு பெரிய அளவில் பட்டங்கள் இல்லை. மீனா மட்டும் கண்ணழகி என்று அழைக்கப்பட்டார்.
பல வருட இடைவெளிக்கு பிறகு நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வந்தது. இது யார் கொடுத்தது எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் எப்படியோ நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். அந்த வரிசையில் இப்போது சாய்பல்லவி லேடி பவர் ஸ்டார் ஆகியிருக்கிறார்.
சாய்பல்லவி தற்போது தெலுங்கில் நடித்துள்ள விராட பர்வம் படத்தின் அவரது நடிப்பு பரவலாக பேசப்படுகிறது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சி ஒன்றில் புஷ்பா பட இயக்குனர் சுகுமார், சாய்பல்லவியை லேடி பவன்குமார் என்று குறிப்பிட்டார். இதையே ரசிகர்கள் பிடித்துக் கொண்டு பவன்குமாருக்கு பவர் ஸ்டார் பட்டம் இருப்பதால் சாய்பல்லவியை லேடி பவர் ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கி விட்டார்கள். சாய்பல்லவி எங்கு சென்றாலும் ரசிகர்கள் லேடி பவர் ஸ்டார் என்றே கோஷமிடுகிறார்கள். விராட பர்வம் படத்தின் விளம்பரங்களிலும் லேடி பவர் ஸ்டார் என்றே குறிப்பிடுகிறார்கள்.
1174 days ago
1174 days ago