தமிழுக்கு வந்த பார்வதி அருண்
ADDED : 1232 days ago
வளர்ந்து வரும் மலையாள நடிகை பார்வதி அருண். செம்பருத்திபூ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமான பார்வதி, அதன்பிறகு என்னாளும் சரத், இருபத்தியொண்ணாம் நூற்றாண்டு, களக்கூத்கார், உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மவுனமே இஷ்டம் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார், கீதா என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.
தமிழில் வெற்றியுடன் ‛மெம்மரிஸ்' படத்தில் அறிமுகமானாலும் சசிகுமாருடன் நடித்துள்ள காரி படம்தான் முதலில் வெளிவருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹேமந்த்குமார் இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சக்ரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார்.