பிரபுதேவா படத்தை வெளியிடும் உதயநிதி
ADDED : 1283 days ago
இயக்குனர் என்.ராகவன் இயக்கத்தல் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'மை டியர் பூதம்'. ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். காமெடி மற்றும் பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா பூதம் மாதிரியான வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து வருகிறார். அஷ்வந்த், பரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கேசிதா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டு ரீலிஸ் உரிமைகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளாராம். வருகின்ற ஜூலை 15-ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.