ஆல்பத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட மாளவிகா மோகனன்
ADDED : 1208 days ago
'பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய 'பியாண்ட் த க்ளவுட்ஸ்', படத்தின் மூலம் பிரபலமானார். ரஜினிகாந்த்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் மாறன் படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தவுபா என்ற இசை ஆல்பம் ஒன்றில் கவர்ச்சியாக ஆடியுள்ளார். பிரபல ராப் இசைக் கலைஞர் பாட்ஷாவின் இசையில், இந்த ஆல்பம் உருவாகியுள்ளது. இதில் மற்றொரு பாடகர் பாயல் தேவ்வும் இணைந்துள்ளார். அப்னி துன் மற்றும் வார்னர் மியூசிக் இண்டியா இணைந்து இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளது. மலையாள ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான மாளவிகா, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதற்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர்.