விஜய்யின் வாரிசு படம் குறித்து தமன் வெளியிட்ட அப்டேட்
ADDED : 1198 days ago
தெலுங்கில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66வது படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஜெயசுதா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாரிசு படத்தின் கம்போசிங் பணியை தான் தொடங்கிவிட்டதாக இசையமைப்பாளர் தமன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதோடு, இயக்குனர் வம்சி மற்றும் பாடலாசிரியர் விவேக் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதனால் இப்படத்தில் விவேக் பாடல் எழுதுவது உறுதியாக இருக்கிறது. இவர் விஜய்க்காக ஆளப்போறான் தமிழன் உள்பட பல ஹிட் பாடல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.