சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1195 days ago
கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்துள்ளார் சிம்பு. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேநாளில் ஜெயம்ரவி நடித்துள்ள அகிலன் படமும் திரைக்கு வரலாம் என தெரிகிறது. இதனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஜெயம்ரவியின் அகிலன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதும் சூழல் உருவாகி இருக்கிறது.