கமலுக்கு கோல்டன் விசா
ADDED : 1196 days ago
ஐக்கிய அரபு அமீரக அரசு இந்திய திரைக்கலைஞர்களுக்கு சிறப்பு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா மூலம் அந்நாட்டில் அவர்கள் 10 ஆண்டுகள் இருக்கலாம். பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் மம்முட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, காஜல் அகர்வால், பார்த்திபன், அமலாபால், விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இந்த விசாவை பெற்றனர். இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் கமல்ஹாசனுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கியுள்ளது. இந்த போட்டோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.