மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1165 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1165 days ago
வெள்ளித்திரையில் நடிகை, தயாரிப்பாளர் என பிசியாக இயங்கி வரும் நடிகை குஷ்பு சின்னத்திரையிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக சில சீரியல்களை தயாரித்து வழங்கி வந்த குஷ்பு இப்போது கலர்ஸ் தமிழ் சேனலுக்காக மீரா என்ற தொடரை தயாரித்து, நடித்தும் வருகிறார். கணவன் - மனைவிக்கு இடையேயான உறவில் ஏற்படும் சிக்கல்களை பேசும் தொடராக இந்த தொடர் உள்ளது.
மீராவாக குஷ்பும் அவரது கணவர் கிருஷ்ணா ரோலில் சுரேஷ் சந்திர மேனனும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், மீரா தொடரில் இருந்து திடீரென சுரேஷ் சந்திர மேனன் விலகியுள்ளார். அவர் விலகியதற்கான காரணங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடாத நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் சுரேஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குஷ்பு - சுரேஷ் ஜோடி ஏற்கனவே லெக்ஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்து நடித்துள்ளனர். எனவே, இவர்களது காம்போ நன்றாக செட்டாகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
1165 days ago
1165 days ago