நோ பாலிட்டிக்ஸ், ஒன்லி சினிமா: விஷால் விளக்கம்
ADDED : 1239 days ago
நடிகர் விஷால் ஆந்திர அரசியலில் குதிக்கப்போவதாகவும், வருகிற சட்டசபை தேர்தலில் ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரபாவு நாயுடுவை எதிர்த்து போட்டியிட போவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை விஷால் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛குப்பம் தொகுதியில் நான் போட்டியிடுவதாக வந்த தகவலை நான் மறுக்கிறேன். ஆந்திர அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு கிடையாது. சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து நான் போட்டியிடவில்லை. இதுபோன்ற வதந்திகள் எப்படி பரவுகிறது என்று தெரியவில்லை. சினிமாவில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகிறேன். என்று தெரிவித்திருக்கிறார்.