மம்முட்டியின் ரோர்சாச் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1425 days ago
இயக்குனர் நிசாம் பஷீர் இயக்கத்தில் மம்முட்டி தற்போது புதிய படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு 'ரோர்சாச்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் ஷராபுதீன், கோட்டயம் நசீர், ஜெகதீஷ், சஞ்சு சிவராம், கிரேஸ் ஆண்டனி, பிந்து பணிக்கர், பாபு அன்னூர், அனீஷ் ஷோரனூர், ரியாஸ் நர்மகலா மற்றும் ஜோர்டி பூஞ்சார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. படக்குழுவினருடன் மம்முட்டி இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.