பூஜையுடன் தொடங்கிய நடிகர் விதார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு
ADDED : 1256 days ago
கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக விதார்த் நடிக்கிறார். ஒளிப்பதிவை எஸ்.ஆர்.சதீஷ்குமார் மேற்கொள்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது .துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நந்தகுமார் ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் 'டோரா' தாஸ் ராமசாமி, 'நெருப்பு டா' அசோக்குமார், 'மஞ்சப்பை' என்.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.