உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே'

கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே'

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை திவ்யபாரதி, அடுத்ததாக நடிகர் கதிர் உடன் ஒரு படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை ஜீரோ படத்தை இயக்கிய ஷிவ்மோஹா இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்கு ‛லவ்டுடே' என்னும் தலைப்பு வைத்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த 1997ம் ஆண்டு விஜய், சுவலட்சுமி நடிப்பில் ‛லவ்டுடே' என்னும் படம் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !