மேலும் செய்திகள்
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1159 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1159 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் 'மாஸ்டர்'. அப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக 'வாத்தி கம்மிங்' பாடல் மிக அதிகமாக பிரபலமானது. சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மேலும் பிரபலப்படுத்தினார்கள்.
ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்தப் பாடல் மீதான அபிமானம் ரசிகர்களிடம் இன்னும் குறையவில்லை. இந்நிலையில் உலக அளவில் டென்னிஸ் போட்டிகளில் முதலிடத்தை வகிக்கும் விம்பிள்டன் போட்டியில் 'வாத்தி கம்மிங்' இடம் பிடித்துள்ளது. விம்பிள்டனின் அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரை வரவேற்கும் வகையில் 'வாத்தி கம்மிங்' என்ற வார்த்தைகளைப் பதிவிட்டு அவரை வரவேற்றுள்ளார்கள்.
இது தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விம்பிள்டன் சமூக வலைத்தள பக்கங்களில் தமிழர் ஒருவர் வேலை செய்கிறாரோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் இந்தப் பதிவுக்கு மிகவும் மகிழ்ந்துள்ளனர். விம்பிள்டன் வரையில் 'வாத்தி கம்மிங்' பிரபலமாகியுள்ளது அவர்களைத் தற்போது மீண்டும் கொண்டாட வைத்துள்ளது.
1159 days ago
1159 days ago