மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1161 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1161 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1161 days ago
தெலுங்குத் திரையுலகத்தில் குணச்சித்திர நடிகராக இருப்பவர் நரேஷ். இவர் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னாள் கதாநாயகனாக நடிகர் கிருஷ்ணாவின் மகன், மகேஷ்பாபுவின் அண்ணன். நரேஷ் ஏற்கெனவே மூன்று முறை திருமணம் செய்துள்ளார்.
நான்காவதாக கன்னட குணச்சித்திர நடிகை பவித்ரா லோகேஷைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக டோலிவுட்டில் தகவல் பரவியது. இதையடுத்து நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யா, மைசூரில் தங்கியிருந்த நடிகை பவித்ராவிடம் சென்று தகராறு செய்திருக்கிறார். அங்கு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.
நரேஷ், பவித்ரா திருமணம் நடந்துவிட்டது என ரம்யா குற்றம் சாட்டியுள்ளார். நரேஷ் ஏற்கெனவே ரம்யாவை விவாகரத்து செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ள நிலையில், ரம்யா தான் இன்னும் நரேஷின் மனைவிதான் என்று கூறி வருகிறார்.
இதனிடையே, பவித்ரா லோகேஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ரம்யாவின் குற்றச்சாட்டுக்களை நம்ப வேண்டாம் என்றும், தானும் நரேஷும் கணவன் மனைவி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மைசூரு போலீசிடம் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் கன்னடம் மற்றும் தெலுங்குத் திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவித்ரா லோகேஷ் சமீபத்தில் வெளிவந்த 'வீட்ல விசேஷம்' படத்தில் படத்தின் கதாநாயகி அபர்ணா பாலமுரளியின் அம்மாவாக நடித்திருந்தார். நிறைய தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
1161 days ago
1161 days ago
1161 days ago