வெற்றிக்கு வேண்டுதல் : திருப்பதியில் ராஷி கண்ணா அன்னதானம்
ADDED : 1192 days ago
பாலிவுட் படமான 'மெட்ராஸ் கபே' மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தனுசுடன் 'திருச்சிற்றம்பலம்', கார்த்தியுடன் 'சர்தார் ' படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் பார்ஸி என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கில் ராஷி கண்ணா, நடித்த 'பக்கா கமர்ஷியல்' என்ற படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராஷி கண்ணா திருப்பதி சென்றார். அங்கு ஏழுமலையானை பக்தி பரவசத்துடன் தரிசித்தவர் பின்னர் அன்னதான மையத்திற்கு சென்று ஆயிரம் பேருக்கு தன் கையால் அன்னதானம் வழங்கினார். கோபிசந்த், சத்யராஜ் நடித்திருக்கும் பக்கா கமர்ஷியல் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்புடன் ஓடத் தொடங்கி இருக்கிறது.