திரிஷாவுக்கு குடைச்சல் கொடுக்கும் டான்சிங் ரோஸ்
ADDED : 1191 days ago
சார்பட்டா பரம்பரை படம் ஆர்யாவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது என்றால் அந்தப்படத்தில் வேம்புலியாக நடித்த ஜான் கொக்கேன் மற்றும் டான்சிங் ரோஸ் ஆக நடித்த சபீர் கல்லரக்கல் இருவருக்கும், கூடவே சின்னத்திரை நடிகர் ஆன சந்தோஷ் பிரதாப்புக்கும் கூட ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.
இந்த நிலையில் தற்போது திரிஷா நடிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கி வரும் படம் 'தி ரோடு'. இந்தப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, வில்லனாக நடிக்கிறார் சபீர் கல்லரக்கல்... இந்த படத்தில் வில்லனாக மாறி படம் முழுதும் திரிஷாவுக்கு குடைச்சல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சபீர். ஒரு நல்ல பெண்ணுக்கும் மோசமான ஆணுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் இந்த படத்தின் கதை என்று கூறியுள்ளார் இயக்குனர் அருண் வசீகரன்.