மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1161 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1161 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1161 days ago
தேசிய விருது பெற்ற ஒத்த செருப்பு படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி உள்ள படம் இரவின் நிழல். இந்த படம் ஒரே ஷாட்டில் இரண்டு மணிநேர முழுநீள பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ளது. வருகிற 15ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் இந்த படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
இதுவரை மூன்று சர்வதேச விழாக்களில் இரவின் நிழல் வெற்றிபெற்றுள்ளது. அதில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுக்கு இரண்டு விருதுகளும் இரவின் நிழல் படத்திற்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் இரண்டு சர்வதேச விருதுகளில் தேர்வு பட்டியலில் உள்ளது. இதுவரை இரவின் நிழல் திரைப்படத்தை சிறப்புக் காட்சியை கண்ட திரைப் பிரபலங்கள் இதுவரை இப்படி ஒரு திரைப்படத்தை கண்டதில்லை என நெகிழ்ந்து ஆச்சர்யப்பட்டு பாராட்டுகின்றனர்.
மேற்கண்ட தகவல்கள் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1161 days ago
1161 days ago
1161 days ago