உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது

வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது

மாநாடு படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இதில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டப்பணிகள் நடக்கின்றன. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இதானி நடிக்க, ராதிகா அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசைவிழாவை இந்த மாதம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் திடீரென்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் சிம்பு. இதன் காரணமாக இசை விழாவை தள்ளி வைத்திருந்தவர்கள் தற்போது வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை விழாவை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !