மேலும் செய்திகள்
தமிழில் 'ட்ரான்' 3ம் பாகம்: நாளை வெளியாகிறது
1160 days ago
நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை பாலியல் புகார்
1160 days ago
'கருடன்' ரீமேக் தோல்வி ஏன் ? நாயகன் விளக்கம்
1160 days ago
மணிகண்டன் இயக்கத்தில் நிஜ விவசாயி நல்லாண்டி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'கடைசி விவசாயி'. இதனை விஜய்சேதுபதியே தயாரித்திருந்தார். தியேட்டரில் வெளியான படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு அதிக மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.
தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும், கவுரவத்தையும் பெற்ற இந்த திரைப்படம் தற்போது மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது.
உலக அளவில் சிறந்த திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி இணையதளங்களில் 'லெட்டர் பாக்ஸ்' எனும் இணையதளமும் ஒன்று. இந்த இணையதளத்தில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான ஆண்டின் முதல் பாதியில் வெளியான சிறந்த படங்களை பட்டியலிட்டிருக்கிறது. உலகப்படங்கள் தரவரிசைப்படுத்தப்பட்ட அந்தப்பட்டியலில் கடைசி விவசாயி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.
ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி, ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த ‛ஆர்.ஆர்.ஆர்' படம் ஆறாவது இடத்திலும், 400 கோடிக்கு மேல் வசூல் செய்த 'விக்ரம்' படம் 11வது இடத்திலும் வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.
1160 days ago
1160 days ago
1160 days ago