மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1159 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1159 days ago
சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி உள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் , கலையரசன், ஷபீர், ஹரி, தாமு, வின்சு, வினோத், சுபத்ரா, உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். யாழி பிலிம்ஸ் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிஷோர் ஒளிப்பதிவு செய்துள்ளார், டென்மா இசை அமைத்துள்ளார். இந்த படம் தயாராகி கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாகிறது. தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.
படம் குறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம். காதலை இங்கு அரசியலாக பார்க்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி வாழும் மனிதர்கள் மத்தியில் காதலை கொண்டாடும் விதமாக எதற்குள்ளும் அடைபடாத அதன் பரிபூரணத்தை சொல்லுகிற படமாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1159 days ago
1159 days ago