மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1158 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1158 days ago
யோகி பாபு, ஓவியா நடிக்கும் காண்டிராக்டர் நேசமணி படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் இயக்குகிறார். காண்டிராக்டர் நேசமணி என்பது பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நடித்த காமெடி கேரக்டரின் பெயராகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கேரக்டர் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது.
இந்த நிலையில் காண்டிராக்டர் நேசமணி என்ற தலைப்புக்கு வடிவேலு தரப்பில் இருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது நாய் சேகர் படத்தில் நடித்து வரும் வடிவேலு, பின்னாளில் நேசமணி கேரக்டரில் தனி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தற்போது காண்டிராக்டர் நேசமணி என்ற டைட்டிலை 'பூமர் அங்கிள்' என்று மாற்றி உள்ளனர். இதுகுறித்து தயாரிப்பு தரப்பு அளித்துள்ள விளக்கத்தில் வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதற்கு மதிப்பு அளிக்கும் விதமாக படத்தின் டைட்டிலை 'பூமர் அங்கிள்' என்று மாற்றியுள்ளோம் என்று கூறியுள்ளது.
1158 days ago
1158 days ago