மீண்டும் ஒரு விடியும் வரை காத்திரு
ADDED : 1185 days ago
கே.பாக்யராஜ் இயக்கிய திகில் படம் விடியும் வரை காத்திரு. இந்த டைட்டிலில் தற்போது புதிய படம் ஒன்று தயாராகிறது. இதனை லிப்ரா புரொக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. டைட்டிலுக்கான முறையான அனுமதியை கே.பாக்யராஜிடம் பெற்றிருக்கிறார். நேற்று நடந்த படத்தின் பூஜையில் கே.பாக்யராஜூம் கலந்து கொண்டார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷாஜி சலீம் இயக்குகிறார்.
இதில் விதார்த், விக்ராந்த், வருண், கார்த்திக் நடிக்கிறார்கள். இவர்களுடன் மஹாலட்சுமி, நிமி, குயின்ஸி, வலீனா என 4 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ஞானசவுந்தர் ஒளிப்பதிவு செய்கிறார், அஷ்வந்த் இசை அமைக்கிறார். படப்பிடிப்புகளை ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஒரு இரவில் நடப்பது மாதிரியான கதை. பாக்யராஜ் இயக்கிய படம் போன்று இதுவும் திகில் பட ஜார்னரில் படமாகிறது.