மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1180 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1180 days ago
தெலுங்கில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லைகர். பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார். இந்தப் படம் குத்துச் சண்டை கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் உலக புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசனும் நடித்துள்ளார். அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கு, கன்னடன், மலையாளம், இந்தி, தமிழ் என 5 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. லிஜோ ஜார்ஜ் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்திலிருந்து அக்டி பக்டி என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பான்டேவும் நடனம் ஆடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜூலை 11 அன்று பாடல் வெளியாகிறது
1180 days ago
1180 days ago