சூர்யாவை போன்று சம்பளமே வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய்
ADDED : 1185 days ago
விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியவர் அட்லீ. தற்போது ஷாருக்கான் - நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் பிரபு தேவா இயக்கிய ரவுடி ரத்தோர் என்ற படத்தில் ஒரு பாடல் கட்சியில் நடித்திருந்த விஜய், மீண்டும் இந்த ஜவான் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு, தற்போது கமலின் விக்ரம் படத்தில் சம்பளமே வாங்காமல் ஒரு கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்தது போன்று, விஜய்யும் இந்த ஜவான் படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஜவான் படத்தில் விஜய் நடிக்கும் காட்சியை ஒரே நாளில் படமாக்க அட்லீ திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.