பாலா - சூர்யா படத்தின் தலைப்பு 'வணங்கான்'
ADDED : 1228 days ago
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தெலுங்கு நடிகை க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மலையாள நடிகை மமிதா பைஜூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .
இந்த படத்தின் இயக்குனர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூலை 11) படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு வணங்கான் என பெயரிட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.