கண்மணி - நவீனின் க்யூட் ஹனிமூன் மொமண்ட்ஸ்!
ADDED : 1263 days ago
தொலைக்காட்சி பிரபலங்களான நவீன் மற்றும் கண்மணிசேகரின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. புதுமண தம்பதிகளான இருவரும் ஜாலியாக டூயட் பாட ஹனிமூன் சென்றுள்ளனர். சிம்லாவில் உல்லாசமாக சுற்றிக்கொண்டிருக்கும் அவர்கள் அம்மாநிலத்தின் பாரம்பரிய உடையை அணிந்து போட்டோக்களை எடுத்துள்ளனர். மேலும், அங்கே வாகனமாக பயன்படுத்தப்படும் எருமை மீது ஏறியும் போஸ் கொடுத்து ஹனிமூனை ஜாலியாக என்ஜாய் செய்து வருகின்றனர்.