சேத்துமான் பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஜயகுமார்
ADDED : 1182 days ago
பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான சேத்துமான் திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. அறிமுக இயக்குனர் தமிழ், இப்படத்தை பெருமாள் முருகன் எழுதிய வறுகறி சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கினார்.
சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் தமிழின் புதிய படம் உருவாக இருக்கிறது . இப்படத்தில் 'உறியடி' பட பிரபலம் விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.