மெழுகு டால் - ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
ADDED : 1280 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் அதிக பிரபலமடைந்த ஒரே நபர் நடிகை ஓவியா தான். சினிமாவில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவரை ரசிகர்கள் நெஞ்சில் வைத்து கொண்டாடும் ராணியாக மாற்றியது. சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள ஓவியா, 'பூமர் அங்கிள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஓவியா, சேலையில் மெலுகு சிலை போல் அழகாக இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து அவரது ஆர்மியின் உறுப்பினர்கள் 'மெழுகு டாலு நீ, அழகு ஸ்கூலு நீ' என பாட ஆரம்பித்துவிட்டனர்.