சிரஞ்சீவி படத்தில் இணைந்த ரவி தேஜா
ADDED : 1176 days ago
காட்பாதர், வால்டேர் வீரய்யா, போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதையடுத்து அவர் நடிக்கும் 154வது படத்தை கே.எஸ்.ரவீந்திரா(பாபி) இயக்க போகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜாவான ரவி தேஜா இணைந்து இருக்கிறார். இது குறித்து அப்படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு காரில் இருந்து இறங்கும் ரவி தேஜா, ஒரு கேரவனின் கதவை தட்டுகிறார். அப்போது கதவை திறக்கும் சிரஞ்சீவி, தனது முகத்தை காண்பிக்காமல் அவருக்கு கைகுலுக்கி கேரவனுக்குள் இழுக்கிறார். இப்படி ஒரு வீடியோவை அந்த படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.