குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் பிகினி வீடியோவை வெளியிட்ட பிரணிதா
ADDED : 1177 days ago
சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என பல படங்கள் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. தற்போது கன்னடத்தில் ரமணா அவதாரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு நிதின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பிரணிதாவுக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள அவர் ஒரு வீடியோ மற்றும் கடலுக்குள் இருந்து கரையை நோக்கி தான் நடந்து வரும் பிகினி வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.