யோகி பாபுவின் பொம்மை நாயகி பர்ஸ்ட் லுக் வெளியீடு
ADDED : 1188 days ago
நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் 61வது படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் ரஞ்சித். இந்த நிலையில் அவர் தயாரித்துள்ள பொம்மை நாயகி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஷான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் தனது மகளுக்காக ஒரு தந்தை நடத்தும் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனது மகளாக நடித்துள்ள சிறுமியுடன் யோகி பாபு நின்று கொண்டிருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.