மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1166 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1166 days ago
இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கடமையை செய்'. இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். கதாநாயகியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, ராம்ஜி, ஜெயச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் 'ஸ்கூப்பர்' என்ற விநோத நோயால் கதாநாயகன் பாதிக்கப்படுகிறார். அப்போது தன்னை தாக்க வரும் எதிரிகளிடமிருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 12ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .
1166 days ago
1166 days ago