சிம்புவை இயக்குகிறாரா சுதா கொங்கரா?
ADDED : 1180 days ago
தமிழில் துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இவர் தற்போது தமிழில் சூர்யா நடிப்பில் இயக்கிய சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது சூரரை போற்று ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கி முடித்ததும் நடிகர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியானது.
ஆனால், சுதா கொங்கரா தரப்பு இதனை மறுத்துள்ளது. இது குறித்து சுதா கொங்கரா கூறுகையில், ‛சூர்யா உடன் தான் என் அடுத்த படம். அது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதற்கு அடுத்ததாக கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'ஹோம்பலே பிலிம்ஸ்' நிறுவனத்தின் படத்தை இயக்குகிறேன். இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்றார்.