ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றார் இளையராஜா
ADDED : 1225 days ago
புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி ஏற்று இசையமைப்பாளர் இளையராஜா பதவி ஏற்றுக் கொண்டார்.
இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் ராஜ்சபா நியமன எம்பி.,யாக தேர்வானார். அவருக்கு பிரதமர், முதல்வர், திரைக்கலைஞர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த சமயத்தில் இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்தவாரம் சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று(ஜூலை 25) ராஜ்யசபா எம்பி.,யாக பதவியேற்றுக் கொண்டார் இளையராஜா. பார்லிமென்ட்டில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்று, கடவுள் பெயரை கூறி பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக டில்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.