ஜீவஜோதி கதையை படமாக்கும் ஜெய் பீம் இயக்குனர்
ADDED : 1200 days ago
சூர்யா தயாரித்து நடித்த ஜெய்பீம் என்ற படத்தை இயக்கியவர் ஞானவேல். இவர் அடுத்தபடியாக மறைந்த சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி இடையே நடந்த சட்டப் போராட்டம் மற்றும் ஜீவ ஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு குறித்த கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை 18 ஆண்டுகளாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கதையை தமிழில் இயக்காமல் ஹிந்தியில் தோசா கிங் என்ற பெயரில் இயக்குகிறார். ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி கேரக்டர்களில் பிரபல பாலிவுட் நடிகர் - நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இது குறித்த தகவலை ஜுங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.