‛கலகத் தலைவன்' ஆனார் உதயநிதி
ADDED : 1216 days ago
தி.மு.கழகத் தலைவர் கருணாநிதியின் பேரனும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி சினிமாவில் ‛கலகத் தலைவன்' ஆனார். தடையறத் தாக்க, மீகாமன், தடம் படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு தற்போது ‛கலகத் தலைவன்' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரிக்கிறார். இந்த படத்தை பற்றிய ரகசியங்களை பாதுகாத்து வந்த நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டைட்டிலையும் வெளியிட்டுள்ளனர்.
தி.மு.கழக முன்னாள் தலைவர் கருணாநிதியை எதிர்கட்சிகயினர் கலகத் தலைவர் என்று முன்பு கிண்டல் செய்து வந்த நிலையில் தற்போது அவர் பேரன் நடிக்கும் படத்திற்கு கலகத் தலைவர் என்றே பெயர் வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.