புதியவர்களின் இனி ஒரு காதல் செய்வோம்
ADDED : 1249 days ago
எப்பிக் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இனி ஒரு காதல் செய்வோம். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்கியுள்ளார். புதுமுகம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா ஷ்ரிம்டன் நடித்துள்ளார். கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரேவா எனும் பெண் இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஹரிஹரன் கூறியதாவது: 90களில் பிறந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும், நட்பையும், காதல் மற்றும் பிரிவையும் பிரதிபலிக்கும் வண்ணம் படத்தின் கதை அமைந்துள்ளது. முழுக்க முழுக்க காதல் மற்றும் காமெடி கலந்த படம். வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று படத்தை வெளியிடுகிறோம் என்றார் ஹரிஹரன்.