‛கத்தரி பூவழகி' ரோஷினி ஹரிப்ரியனின் கியூட் கிளிக்ஸ்
ADDED : 1215 days ago
நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர். சின்னத்திரை நேயர்களில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சீரியலை விட்டு விலகிய பின் குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார். இப்போதெல்லாம் சீரியலை விட சினிமா ப்ராஜெக்ட்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள ரோஷினி விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயின் ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அடிக்கடி போட்டோஷூட்டுகளை போட்டு கவர்ந்து வரும் ரோஷினி தற்போது கத்தரி பூ நிறத்தில் லெஹங்கா அணிந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார். வைரலாகும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் 'கத்தரி பூ அழகி' என பாட்டு பாடி சைட் அடித்து வருகின்றனர்.