ஜூலை 31ல் ‛பொன்னியின் செல்வன்' முதல் பாடல் வெளியீடு
ADDED : 1166 days ago
கல்கியின் சரித்திர நாவலான ‛பொன்னியின் செல்வன்' திரைப்படமாக உருவாகி உள்ளது. மணிரத்னம் இயக்க விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்., 30ல் வெளியாக உள்ளது.
சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகி ரசிகர்களை கவந்தது. தொடர்ந்து படம் தொடர்பான புரொமோஷன்களை படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து முதல் பாடலான ‛பொன்னி நதி' என்ற பாடலை வருகிற ஜூலை 31ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.