தனக்குச் சொந்தமான வீட்டை நடிகருக்கு விற்ற ஜான்வி கபூர்
ADDED : 1161 days ago
ஹிந்தி திரையுலகின் முன்னாள் கனவுக்கன்னி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவரும் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னும் மிகப் பெரிய வெற்றியை ஜான்வி அடையவில்லை என்றாலும் பாலிவுட்டில் பிரபலமாகவே உள்ளார்.
ஜான்வி கபூர் 2020ம் ஆண்டில் மும்பை ஜுஹு கடற்கரைப் பகுதியில் மூன்று தளங்களைக் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை 39 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆடம்பரமான அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 6 கார்களை நிறுத்தும் வசதி கொண்ட அந்த வீட்டைத் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவுக்கு 44 கோடிக்கு விற்றுள்ளாராம்.
கடந்த மார்ச் மாதமே இதற்காகப் பேசி முடிக்கப்பட்டதென்றாலும் பத்து நாட்களுக்கு முன்புதான் பத்திரப்பதிவு நடந்ததாம்.