ரூசோ பிரதர்ஸ்-க்கு நன்றி தெரிவித்த ராஜமவுலி
ADDED : 1164 days ago
இந்தியத் திரையுலகத்தின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைக் கொடுத்து உலகம் முழுவதும் உள்ள பல திரைப்படக் கலைஞர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' மற்றும் சமீபத்தில் வெளிவந்த 'த கிரே மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் சமீபத்தில் மும்பை வந்திருந்தனர். அப்போது அவர்களை ராஜமவுலி சந்தித்துப் பேசியுள்ளார்.
அது குறித்து ரூசோ பிரதர்ஸ், “சிறப்பு வாய்ந்த ராஜமவுலியை சந்தித்தது பெருமை” என்று தெரிவித்திருந்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து ராஜமவுலி, “மரியாதையும், மகிழ்ச்சியும் என்னுடையது. உங்களுடனான பேச்சு சிறப்பு வாய்ந்தது. உங்களை சந்தித்து உங்கள் கலையை நானும் சிறிது கற்றுக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.