உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமலாபால் படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியீடு

அமலாபால் படம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியீடு

அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் படம் காடவர். மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கி உள்ளார். அமலாபாலுடன் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சன் ராஜ் இசையமைத்துள்ளார்.

இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படத்தின் கதை. ஆகஸ்ட் 12ம் தேதி முதல் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !