குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரணிதா
ADDED : 1224 days ago
உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. கடந்த ஆண்டு மே மாதம் பிரஜித் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்த கடந்த பிரணிதாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்றைய தினம் மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதையடுத்து தனது மகளுக்கு அர்ணா என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்திருந்தவர், தற்போது முதல் முதலாக தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் பிரணிதா. பிறந்த குழந்தைக்காக நடத்தப்படும் போட்டோ ஷூட்டை மகளுக்கு எடுத்துள்ளார் பிரணிதா. அப்போது எடுத்த போட்டோக்களை தற்போது பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் குட்டி பிரணிதா என கருத்து பதிவிட்டுள்ளனர்.