300 படங்களுக்கு மேல் நடித்த தெலுங்கு காமெடி நடிகர் காலமானார்
ADDED : 1162 days ago
1961ம் ஆண்டு வெளியான சீதாராம கல்யாணம் படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கடலி ஜெயசாரதி. தொடர்ந்து ஜகன் மோகினி, பக்த கண்ணப்பா, டிரைவர் ராமுடு, குடாச்சாரி நம்பர் 1 உட்பட சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆந்திர சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன பொருளாளராகவும் இருந்தார்.
83 வயதான ஜெயசாரதி முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த பல மாதங்களாகவே பல்வேறு உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.