முதன் முறையாக பழங்குடி மொழி திரைப்பட விழா: கேரளாவில் நடக்கிறது
ADDED : 1207 days ago
கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச பெண்கள் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகிலேயே முதன் முறையாக பழங்குடி மொழி திரைப்பட விழா நடக்கிறது.
கேரள மாநிலம் அடப்பாடியில் வருகிற 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பழங்குடியின மொழியில் தயாரான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவில் தயாரான இருள, முதுக, குரும்ப பழங்குடி மொழிகளில் தயாரான படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கான லோகோ வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. மம்முட்டி லோகோவை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் விஜீஷ் மணி, பி.உன்னிகிருஷ்ணன், தயாரிப்பாளர்கள் டாக்டர் என்.எம்.பாதுஷா, எஸ்.ஜார்ஜ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் அரோமா மோகன், விழா இயக்குநர் விஜீஷ்மணி கலந்து கொண்டனர்.