மர்லின் மன்றோ வாழ்க்கை சினிமா : செப்டம்பர் 23ல் வெளியாகிறது
ADDED : 1160 days ago
பழம்பெரும் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ. உலக சினிமாவில் முதல் கனவு கன்னியாக இருந்தவர். இவரது வாழ்க்கை இப்போது புளோன்ட் என்ற பெயரில் படமாக தயாராகி உள்ளது. ஜாய்ஸ் கரோல் ஓட்ஸின் புளோன்ட் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் தயாராகி உள்ளது. இதனை ஆண்ட்ரூ டொமினிக் இயக்கியுள்ளார்.
மர்லின் மன்றோவாக அனா டி அர்மாஸ் நடித்துள்ளார். அட்ரியன் ப்ராடி, பாபி கன்னாவல், இவான் வில்லியம்ஸ், ஜூலியான் நிக்கல்சன், சேவியர் சாமுவேல், ஸ்கூட் மெக்நெய்ரி, கேரட் டில்லாஹன்ட் மற்றும் லூசி டிவிட்டோ ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. படம் வருகிற செப்டம்பர் 23ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.