மீண்டும் 3 ஹீரோயின்களுடன் நடிக்கும் அசோக் செல்வன்
ADDED : 1159 days ago
கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சி எஸ் கார்த்திகேயன் இயக்கி வரும் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ், மலையாள நடிகை கார்த்திகா முரளிதரன் மற்றும் தெலுங்கு நடிகை சாந்தினி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பள்ளி கல்லூரி மற்றும் அதை அடுத்த காலகட்டத்தில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகிறது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, மன்மத லீலை, வேழம், மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகிகள் நடித்துள்ளனர். தற்போது அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு மூன்று நடிகைகள் ஜோடியாக நடிக்கிறார்கள்.