சிறுவயது முதல் நடிக்கவே ஆசை : அதிதி ஷங்கர்
ADDED : 1216 days ago
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. டாக்டருக்கு படித்துள்ள இவர் நடிகையாக களமிறங்கி உள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் நாயகியாக களமிறங்கி உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இதில் அதிதி பங்கேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அதிதி, ‛‛இந்த திரைப்படத்தில் வாய்ப்பளித்த சூர்யா சாருக்கு நன்றி. இந்த படத்தில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. நான் நடிப்பதில் அப்பாவின் தலையீடு எப்போதும் இருந்ததில்லை. இனி அடுத்தடுத்து படங்களில் நடிக்கவுள்ளேன். சிறுவயதில் இருந்தே நடிப்பதற்கு ஆசை தான். அப்பா ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அப்பா வாய்ப்பு தந்தால் நடிப்பேன். கிராமத்து பெண்கள் தான் அழகு. கிராமத்து பெண்ணாக நடித்ததில் மகிழ்ச்சி தான்'' என்றார்.