மேலும் செய்திகள்
காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம்
1152 days ago
திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ்
1152 days ago
நடிகை குஷ்பூ தன்னுடன் திரையுலகில் ஒரே காலகட்டத்தில் பயணித்தவர்களை சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் தனது மகள்களை அழைத்துக்கொண்டு நடிகை ரம்பாவின் வீட்டிற்கு சென்று பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை சந்தித்துள்ளார் குஷ்பூ.
இது குறித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ள குஷ்பூ, “என்னுடைய ஹீரோவை சந்தித்தது கனவு நனவானது போல இருந்தது. அந்த அளவிற்கு தனது எளிமையான, பண்பான செயல்களால் என்னை ஸ்தம்பிக்க வைத்தார் அஜய் தேவ்கன். இந்த மனிதரிடத்தில் எதுவும் பொய் இல்லை. உண்மையிலேயே இது எனக்கு ரசிகையாக மாறிய தருணம் தான்.. எனக்காக நேரம் ஒதுக்கி உங்கள் அன்பை வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி அஜய் தேவ்கன்.. மீண்டும் உங்களை சந்திக்க விரும்புகிறேன்: என்று கூறியுள்ளார்.
1152 days ago
1152 days ago